ஹாட்ரிக் விக்கெட் போச்சு..என்னை மன்னிச்சுடு! போட்டிக்கு பின் ரோஹித் பேசியது என்ன?

3 days ago
ARTICLE AD BOX
axar patel rohit sharma

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய நிலையில், 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில்,  46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்த போட்டியில் திடீரென அனைவருடைய கவனத்தை திருப்பியது பேட்டிங்கில் கில் என்றால் பந்துவீச்சில் அக்சர் படேல் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், 8 ஓவரை பந்து வீச வந்த அவர் தொடர்ச்சியாக ஹாட்ட்ரிக் எடுக்கும் வகையில் பந்து வீசி பங்களாதேஷ் அணியை திணற வைத்தார். ஆனால், ரோஹித் ஷர்மாவால் அவருடைய ஹாட் ட்ரிக் விக்கெட் மிஸ் ஆனது.

8-வது ஓவரின் 2-வது பந்தில் டான்சித் ஹசன், 3-வது பந்தில் ஆட்டமிழந்தனர். எனவே, கண்டிப்பாக ஹாட் ட்ரிக் விக்கெட் தான் எடுக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பார்த்ததை போலவே அதற்கான வாய்ப்பும் அமைந்தது. அவர் வீசியா 4-வது பந்தை எதிர்கொண்ட ஜேக்கர் அலி பந்தை மெதுவாக தட்ட முயன்றார் ஆனால், பந்து சற்று எட்ஜ் ஆன காரணத்தால் பின்னாடி இருந்த ரோஹித் ஷர்மாவிடம் கேட்சுக்கு சென்றது.

ரோஹித் கையில் போனது கிட்டத்தட்ட கிணத்துக்குள் மாட்டிய பந்து என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் ஒரு சிறந்த பீல்டர் ஆனால், இந்த முறை சற்று மிஸ் ஆகி கீழே விழுந்தது. அவர் கேட்ச் தவறவிட்ட காரணத்தால் அக்சர் படேல் ஹாட் ட்ரிக் விக்கெட் மிஸ் ஆனது. கேட்ச் விட்டதற்கு, ஹாட் ட்ரிக் விக்கெட் தன்னால் மிஸ் ஆனது என்பதை உணர்ந்த ரோஹித் அக்ஸரை பார்த்து என்னை மன்னித்துவிடு என்பது போலை கையை எடுத்து கும்பிட்டு செய்கை காட்டினார்.

அதனை தொடர்ந்து போட்டி முடிந்த பிறகும் இது குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” போட்டியில் அந்த கேட்ச் தவறவிட்டது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. என்னுடைய கேட்ச்சை நான் தவறவிட்ட காரணத்தால் அவருடைய ஹாட் ட்ரிக் போனது வருத்தகமாக இருக்கிறது. இருப்பினும் ஒரு சில சமயங்களில் கொஞ்சம் பதட்டமாக இருக்கும் போது இப்படி நடக்கலாம். ஆனால், எனக்கு வந்தது எளிமையான கேட்ச் தான். நாளைக்கு நான் அக்சர் படேலை  ஒரு இரவு உணவிற்கு அழைத்துச் சென்று இது குறித்து பேசலாம்” என நகைச்சுவையாக ரோஹித் சர்மா பேசினார்.

Read Entire Article