மகா சிவராத்திரி 2025!. சிவனை வழிபட இந்த பூஜை பொருட்களை மிஸ் பண்ணிடாதீங்க!. என்னென்ன தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

Maha Shivaratri 2025: இந்த ஆண்டு மகா சிவராத்திரி தினத்தன்று சிவனை வழிபாடு செய்ய தேவையான அனைத்து பொருட்களின் விவரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சிவனை அனைவரும் ஒரே நேரத்தில் வழிபடக்கூடிய மகா சிவராத்திரி வழிபாடு பண்டிகை நாளை உலகம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒவ்வொரு சிவன் கோவில்களிலும் சிவராத்திரி வழிபாடு மாறுபடும். குறிப்பாக, திருவண்ணாமலையில் சிவராத்திரி வழிபாடு இரவு முழுவதும் அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நான்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரை மாசி வீதிகளில் சுவாமியும் அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மகா சிவராத்திரி நன்னாளில் சிவபெருமானை வழிபட்டால் நமக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என்பது இந்து மக்களின் ஐதீகம். ஆகம விதிகளை கடைபிடித்து நவராத்திரி விழாவிற்கு சிவனுக்கு விரதம் இருந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மனம் உருகி சிவனை வழிபடும்போது நமது முன் ஜென்ம பாவங்கள் விலகிப் போகும் என்பது நமது சிவபுராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரிக்கு முந்தைய நாளான இன்று 25ஆம் தேதி பிரதோஷ நாளாகும். தோஷங்களை நீக்கும் அற்புமான நாளான பிரதோஷம் அன்றும் மறுநாள் மகாசிவராத்திரி அன்றும் உபவாசம் ( பட்டினி ) இருக்க வேண்டும். இந்த நன்னாளில் புராணங்களின்படி சிவபெருமான் பார்வதி தேவியுடன் ஐக்கியமாகி தாண்டவம் ஆடும் நிகழ்வும் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரி விரதத்தில் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி என்று அம்மாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படும்.

மகா சிவராத்திரிக்கு தேவையான அடிப்படி பூஜை பொருட்கள்: பால், சந்தனம், விபூதி, பன்னீர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், வெட்டி வேர், வில்வ இலை அபிஷேகத்திற்கு முக்கிய பொருட்கள். கண்டிப்பாக அபிஷேகத்திற்கு வில்வ இலை பயன்படுத்துவது அவசியம். சிவ லிங்கத்தை ஒரு தாம்பூலத் தட்டில் வைத்து அபிஷேகம் செய்யவும். சிவ லிங்கம் மேல் முழுவதும் வில்வ இலையைப் போட்டு அர்ச்சித்து, நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிய படியே அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின்னர் சிவ லிங்கத்தை எடுத்து வைத்து அலங்காரம் செய்யுங்கள்.

Readmore: கவனம்…! JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

The post மகா சிவராத்திரி 2025!. சிவனை வழிபட இந்த பூஜை பொருட்களை மிஸ் பண்ணிடாதீங்க!. என்னென்ன தெரியுமா? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article