Headlines|ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முதல் IND, NZ அரையிறுதிக்கு தகுதி வரை!

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
25 Feb 2025, 1:14 am
  • ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்டத்தலைநகரங்களில் இன்று போராட்டம். அமைச்சர்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து நடவடிக்கை.

  • தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு. ஞானசேகரன் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்.பி. பிருந்தாவும் பணியிட மாற்றம்

  • கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக வசித்த பெண்ணை, வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை. ஒருவர் கைதான நிலையில் மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறையினர்.

  • ''ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி. வெறும் அச்சத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எந்த காரணமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம்.

  • சென்னையில் வழிப்பறி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 2 வணிகவரித்துறை அதிகாரிகள் கைது. தனிப்படை நடவடிக்கை.

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள். சென்னை ஆலந்தூரில் மத்திய அரசு அலுவலக பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர்.

  • அசாமில் தேயிலை தொழில் தொடங்கப்பட்டதன் 200ஆவது ஆண்டு விழா. 9 ஆயிரம் நடனக்கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை கண்டுரசித்த பிரதமர் மோடி.

  • மராத்தி மொழி தெரியாததாக கூறி கர்நாடக அரசுப்பேருந்து நடத்துநர் மகாராஷ்ட்ராவில் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடரும் பதற்றம். இரு மாநில மக்களும் அமைதி காக்க கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வேண்டுகோள்.

  • சாம்பின்ஸ் டிராபி தொடரின் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி. புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்ததால் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

  • பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம் எனத் தகவல். உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு.

Read Entire Article