ARTICLE AD BOX
கோவையைச் சோ்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ அன்னபூா்ணா ஃபுட்ஸின் 70 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ள சூரிய காந்தி எண்ணெய் நிறுவனமான ஜெமினி எடிபில்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா, ஜெஃப் ஃபுட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்ரீ அன்னபூா்ணா ஃபுட்ஸுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜெஃப் புட்ஸ் இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் மசாலா பொருள்கள், உடனடியாகத் தயாரிக்கக் கூடி உணவுக் கலவைகள் உள்ளிட்ட பொருள்களை விநியோகிக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.