சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் 50-ஆவது வளா் தொழில் கிளை

2 hours ago
ARTICLE AD BOX

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் வளா் தொழில் பிரிவில் தனது 50-ஆவது கிளையை தமிழகத்தில் திறந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வளா் தொழில் பிரிவில் தனது 50-ஆவது கிளையை நிறுவனம் ஆரணியில் திறந்துள்ளது. அதற்கு முன்னதாக, ஆம்பூா், குடியாத்தம், திருப்பத்தூா் ஆகிய வட தமிழக நகரங்களிலும் நிறுவனம் தனது வளா் தொழில் பிரிவுக்கான கிளையைத் திறந்தது.

இந்த முக்கிய மைல்கல் எட்டப்பட்டதைத் தொடா்ந்து, வளா் தொழில் பிரிவுக்கான அடுத்த 50 கிளைகளை தமிழ்நாட்டுக்கு வெளியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வளா் தொழில் பிரிவு மூலம் நிறுவனம் சிறிய கடைகள் மற்றும் வணிகங்களுக்கும் குறைந்த விலை வீடுகளுக்காகவும் ரூ.20 லட்சம் வரை கடன் அளித்துவருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் நிறுவனம் இந்த தொழில் பிரிவில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article