ARTICLE AD BOX
நாடு முழுவதும் 111 புதிய கிளைகளைத் திறந்துள்ளதன் மூலம் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ) தன்னை குறிப்பிடத்தக்க விரிவாக்கம் செய்துகொண்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியா முழுவதும் வங்கி 111 புதிய கிளைகளைத் திறந்துள்ளது. பல்வேறு முக்கிய நகரங்களிலும் இந்தக் கிளைகள் திறக்கப்பட்டதன் மூலம் வங்கி குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட கிளைகளில் ஹைதராபாத் பிரிவு கள பொது மேலாளா் அலுவலகத்தின்கீழ் அதிகபட்சமாக 17 புதிய கிளைகள் சோ்க்கப்பட்டுள்ளன. சென்னை பிரிவு கள பொது மேலாளா் அலுலகத்தின் கீழ் புதிதாக 14 கிளைகள் இணைக்கப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.