ARTICLE AD BOX
ஷகிலாவின் வளர்ப்பு மகளுக்கு என்ன ஆச்சு... எல்லாத்தையும் ஓப்பனா சொன்ன மிளா!
சென்னை: ஆபாச படங்களின் மூலம் பிரபலம் அடைந்த ஷகிலா பிறகு அந்த துறையை விட்டு வெளியேறி விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். ஷகிலா பெயரை தாண்டி அவரது படத்தின் போஸ்டர்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் அவர் சமீபத்தில் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவரது வளர்ப்பு மகள் மிளா ஷகிலா வீட்டை விட்டு வெளியேறியதோடு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷகிலா என்ற பெயருக்கு பின்னால் எந்த அளவிற்கு பெயரும் புகழும் இருக்கிறதோ அதே அளவிற்கு வலிகளும் வேதனைகளும் உள்ளன. தமிழ் படங்களில் அக்கா என்று நகைச்சுவைக்காக வைக்கப்பட்டாலும், திரை ரசிகர்களில் சிலர் ஷகிலா அக்கா என்றே அழைப்பார்கள். பின்னர், மிளா என்ற திருநங்கையை அவர் தத்தெடுத்து வளர்த்து வந்தார். இதனால், ஷகிலாவை தாயுள்ளம் கொண்டவராகவும் பார்த்தனர்.
வளர்ப்பு மகள்: ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிளா பிரபல தனியார் யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சனம் செய்தார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் திருநங்கை போட்டியாளராக பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. ஆனால், நமீதா மாரிமுத்து பங்கேற்றார். அவரை தொடர்ந்து ஷிவின் கணேஷ் பங்கேற்றார். இருப்பினும் மனம் தளராத மிளா தனது வாழ்வில் லட்சிய கனவோடு தான் வாழ்ந்து வருகிறார்.

ஷகிலாவுடன் இல்லை: இந்த சூழலில் மிளாவுக்கும் ஷகிலாவிற்கு என்ன பிரச்னை ஏன் என்று தெரியவில்லை மிளா ஷகிலா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மிளா வீட்டை விட்டு வெளியேறிதற்கு பல காரணங்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஷகிலா மிளாவை மிஸ் யூஸ் செய்தாரா என்கிற அளவுக்கு பேச்சுக்கள் வந்தன பரபரப்பான இந்த சூழலில் மிளா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். ஷகிலா அம்மா என்றே தொடங்கிய மிளா அடுத்து பேசும்போது ஷகிலா என்றே குறிப்பிட்டார். மிளாவா இப்படி பேசுவது என்று நெட்டிசன்கள் கமாண்ட் பாக்ஸில் கேட்க தொடங்கி விட்டனர்.
விளக்கம்: எனக்கும் ஷகிலாவுக்கும் எந்தவித சண்டையும் இல்லை. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. இதனால் தான் ஷகிலா வீட்டை விட்டு வெளியேறினேன். நான் ஷகிலாவின் வீட்டிற்கு சென்றபோதே ரூ.10 லட்சம் பணம், ரூ.15 லட்சம் காருடன் தான் சென்றேன். நான் ஏழை கிடையாது. நான் இல்லாதபோது ஷகிலாவுடன் இருப்பவர்கள் தேவையில்லாத பேச்சுக்களை பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. ஷகிலாவுக்கும் தெரிந்தும் அமைதியாக இருந்தது தான் மனதிற்கு வலித்தது என மிளா தெரிவித்தார்.
மிஸ் யூ அப்பா: ஷகிலா வீட்டை விட்டு வெளியேறிய பின்பு எனது தம்பி வீட்டில் 4 மாதம் இருந்தேன். பின்பு எனது பெற்றோரிடம் சென்றுவிட்டேன். ஆனால், நான் நம்பிய எல்லோருமே என்னை விட்டு போவது தாங்க முடியவில்லை. அப்பா இறந்து போனது ஏற்க முடியாத பாரமாக இருக்கிறது. இந்த நேரத்தில் அப்பாவை நான் ரொம்பவே மிஸ் பன்றேன். அவர் இருந்திருந்தால் நான் இந்த நிலமைக்கு ஆகியிருக்க மாட்டேன். ஷகிலா அம்மா ஓகே தான். இனிமே அவங்க கூட பயணிப்பது கடினம் தான் என்றும் மிளா தெரிவித்தார்.