ARTICLE AD BOX
சென்னை: ஜீ5 தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘செருப்புகள் ஜாக்கிரதை’ வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. எஸ்எஸ் குரூப் சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. சீரிஸை, வரும் மார்ச் 28 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.