ARTICLE AD BOX
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை காலை பழம்பெரும் நடிகையும், முன்னாள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம் செய்தாா்.
வைஜெயந்தி மாலா கடந்த வாரம் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் திங்கள்கிழமை ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தாா். 91 வயதான வைஜெயந்தி மாலா மூலவா் ஸ்ரீரெங்கநாதா், தாயாா் சன்னதி, சக்கரத்தாழ்வாா் சன்னதிக்கு சக்கரநாற்காலியில் வலம் வந்து தரிசனம் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தது மிகப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நான் 13 வயதில் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தேன். தொடா்ந்து கடின உழைப்பால் பெயரையும், புகழையும் அடைந்தேன். உணா்ச்சியும், பக்தியும் என்னை கொண்டு செல்கின்றது. இளைஞா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் என்றாா்.