‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் ஒரு ஃபீல் குட் மூவி தயாரிக்க யுவன் விருப்பம்..

17 hours ago
ARTICLE AD BOX
yuvan shankar raja appreciates sweetheart movie

மீண்டும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இது குறித்த நிகழ்வுகள் காண்போம்..

இசையமைப்பாளர் யுவன் தயாரிப்பில் உருவான ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

‘ஸ்வீட் ஹார்ட்’ படம் பார்த்த பலரும் ஃபீல் குட் அனுபவத்தை கொடுக்கிறது கருத்து தெரிவித்து வருவதால் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படம் இதுவரை சுமார் 1.5 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதால், படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறிவிட்டது.

இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும்யுவன் சங்கர் ராஜா படக்குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

காதலர்களுக்கிடையே ஏற்படும் உரசலும், விரிசலும் உணர்வுபூர்வமாகவும், வித்தியாசமான பின்னணியிலும் விவரித்திருப்பதால், இப்படத்தினை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

குறிப்பாக காதலர்கள் இருவரும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு, ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் யுவன் சங்கர் ராஜா படத்தை முதலில் பார்த்துவிட்டு, இந்த படம் கட்டாயம் ஒர்க்-அவுட் ஆகும் எனவே, தைரியமாக இருக்கலாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும், இதேபோல் ஃபீல் குட் எண்ணம் கொடுக்கக் கூடிய கதைகள் இருந்தால், தானே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

yuvan shankar raja appreciates sweetheart movieyuvan shankar raja appreciates sweetheart movie

The post ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் ஒரு ஃபீல் குட் மூவி தயாரிக்க யுவன் விருப்பம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article