ARTICLE AD BOX
ஐதராபாத்: நடிகர் நாக சைதன்யா இயல்பிலேயே கார் ரேஸ் பிரியர். இதனால், அவருடன் இணைந்து நடிகை சோபிதா துலிபாலா, ரேஸ் காரை ஓட்டிப் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரவும் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சினிமாவில் பிசியாக இருப்பதால் தன்னால் கார் ரேஸில் பங்கேற்க முடியாததால் மனைவி மூலம் தனது கனவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளாராம் நாக சைதன்யா. இதையடுத்து ஹனிமூனுக்காக வெளிநாடு பறந்த இந்த தம்பதி, அங்கு கார் பயிற்சி தளத்துக்கு சென்று, சோபிதாவுக்கு பயிற்சியாளர்கள் மூலம் பந்தயத்துக்கான பயிற்சியை நாக சைதன்யா கொடுத்திருக்கிறார். ஏற்கனவே நடிகர் அஜித் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அந்த பாணியில் சோபிதா இப்போது கார் ரேஸில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.