ARTICLE AD BOX
வாழ்வாதாரத்திற்காக முடிந்தவரை பல மொழிகளைக் கற்பது மிகவும் அவசியமானது என்றும் மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மொழி கற்பதற்கு ஆதரவாக அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது சந்திரபாபு நாயுடுவும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.