தில்லியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நியூசிலாந்து பிரதமர்!

3 hours ago
ARTICLE AD BOX

தில்லியில் சிறுவர்களுடன் இணைந்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் இருவரும் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றனர்.

நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், மார்ச் 16 முதல் 20 ஆம் தேதி வரை 4 நாள்கள் அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் மோடியுடன் சில முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து லக்ஸன் உரையாடினார். 

இந்த நிலையில், தில்லியின் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வமிக்க லக்ஸனும் இணைந்து விளையாடினார். அவருடன் ராஸ் டெய்லர், இந்திய வம்சாவளி நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர்.

இதையும் படிக்க: ராமநவமி விழா: பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தா - லக்னௌ போட்டியில் மாற்றமா?

இதுபற்றி நியூசிலாந்து பிரதமர் லக்ஸன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “கிரிக்கெட் மீதான அன்பைவிட வேறு எதுவும் நியூசிலாந்து மற்றும் இந்தியாவை ஒன்றிணைக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த நியூசிலாந்து பிரதமர் லக்ஸன் பேசுகையில், “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடினர். ஆனால், நாங்கள் அதற்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தோம்.

நல்லவேளை நியூசிலாந்து இந்தப் போட்டியில் வெற்றி பெறவில்லை. அவ்வாறு வெற்றி பெற்றிருந்தால், இரு நாடுகளுக்கு இடையிலான சந்திப்புகள் நடைபெறாமல் போயிருக்கும்” என நகைச்சுவையாகத் தெரிவித்து சிரிப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர்கள் ஏமாற்றம்

Read Entire Article