ARTICLE AD BOX
PM Internship Scheme Tamil : தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்' திட்டத்தின் கீழ் மாணவர்கள் பதிவு செய்ய கடைசி தேதி 3103:2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் "பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்படி பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு: ஐ.டி.ஐ. டிப்ளமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஓராண்டு கால பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ25000, வடக்கத்தொகை மற்றும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை உதவித்தொகையாக ரூ6000 வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 21 முதல் 24 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதித்யா பில்லா நிதி நிறுவணம், அம்புரா சிமெண்ட்ஸ் லிட் ECGC Ltd, HDFC Bank Lad Indian Oil Corporation Ltd. Indusind Bank Ltd. Jubilant Food Works Ltd. Muthoot Finance Ltd. NLC, India Ltd. Power Grid Corporation of India Lad TMB போன்ற முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் பொருட்டு பதிவு செய்துள்ளன. "பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ்படித்த வேலை வாய்ப்பற்ற இளையோர் அதிக அளவில் பதிவு செய்யும் பொருட்டு கடைசி நாள் 31.03.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கோரம்பள்ளம்-அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 31.03.2025 வரை இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளையோர் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் 21 முதல் 24 வயதிற்குட்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ, விண்ணப்பதாரரின் பெற்றோரோ. விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவியோ மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரிபவராக இருந்தல் கூடாது. மேலும் முழு நேர பணியாளர்கள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் NAIS மற்றும் NATS திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றவர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் ஏதாகிலும் ஒரு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது. மேலும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.gpminternshipmcagowin என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ