ARTICLE AD BOX
விஷ்ணு விஷாலா இது.. பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அசத்திட்டாங்க.. மீண்டும் ராட்சசன் கூட்டணி!
சென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்கள் விஷ்ணு விஷால் கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாக உள்ளன. ராம்குமார் - விஷ்ணு விஷால் காம்போ என்றால் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வித்தியாசமான உணர்வை தருகின்றனர். அதேபோன்று இந்த கூட்டணி மூன்றாவது முறையாக ரெண்டாவது வானம் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் கவரும் வகையில் உள்ளன.
விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி படத்திற்கு பிறகு பெரிதளவில் அவரது படங்கள் வெற்றியை பெறவில்லை. பொறுமையாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பிறகு சிசிஎல் செலிபிரட்டி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். அப்போட்டி முடிந்த பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
ராம்குமார் இயக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. 2கே கிட்ஸ்களை கவர்ந்த மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கவரும் வகையில் இருக்கிறது. இதற்கு இரண்டு வானம் என பெயரிடப்பட்டுள்ளது.
வித்தியாசம்: நடிகர் விஷ்ணு விஷால் தனது பெயரில் வித்தியாசம் காட்டுவது போல் படத்தின் பெயரில் இருந்து போஸ்டர் வரைக்கும் வித்தியாசம் காட்டியுள்ளார். பார்த்ததும் கவரும் வகையிலான போஸ்டராக இருக்கிறது. இப்படம் காதலை மையப்படுத்தி உருவாகும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு வானம் இரண்டு காதலர்களின் உலகத்தை பிரதிபலிப்பது போலவே இருக்கிறது. ஹீரோ ஹீரோயின் இருவரும் எதிரும் புதிரும் ஆக மேகத்தில் அமர்ந்திருப்பது போல் உள்ளது. மலை பிரதேசத்தில் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது,
ராம்குமார்: முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் திரை ரசிகர்களை கவனம் ஈர்த்தவர் ராம்குமார். முதல் படத்திற்கு இரண்டாம் படத்திற்கு நிறைய மாற்றங்களை உருவாக்கி மிரட்டி வருகிறார். ராட்சசன் படத்தை யாராலும் மறக்க முடியாது. சீரியல் கில்லர் வகையை சேர்ந்த இப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. ரசிகர்களை மிரட்டும் ஜானராகவும் இருந்தது. தற்போது ராம்குமார் முற்றிலும் வித்தியாசமான ஒரு காதல் கதையை இயக்கவுள்ளார் என்பது படத்தின் போஸ்டரில் தெரிகிறது. இரண்டு வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலையும் வெளியிட்டு கவர்ந்துள்ளனர். இந்த போஸ்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே போல் ராட்சசன் படம் மாதிரியே மிரட்டலாக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

மமிதா பைஜூ: பிரேமலு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மமிதா பைஜூ. டிராகன் பட நடிகை கயாடு லோஹருக்கு இருந்த அதே வரவேற்பு மமிதா பைஜூவிற்கு இருக்கிறது. அவர் நடிக்கும் முதல் தமிழ் படமே விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது தான் ஹைலட். தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். கயாடு லோஹரை மிஞ்சும் அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறுது. நிச்சயம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்றும் நம்பப்படுகிறது. கயாடு லோஹரா - மமிதா பைஜூவா என்று ஒரு பக்கம் நெட்டிசன்கள் அடித்து கொண்டாலும் மமிதா பைஜூவிற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழ் பேச தெரிந்த பெண் என்பதால் ஒரே அன்பு மழையை பொழியை தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்