வாட்ஸ்அப் குழுவில் வெளியான பொதுத்தேர்வு வினாத்தாள்…. விசாரணையில் போலீஸ்…..நடந்தது என்ன…?

3 hours ago
ARTICLE AD BOX

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தேர்வு மையம் ஒன்றின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் வினாத்தாளை வாட்ஸ்அப் குழு ஒன்றில் கசிய விட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 2 நாட்களுக்கு முன்பு கணித பாடத் தேர்வு நடைபெற்றது.

அப்போது இடா மாவட்டத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் அஞ்சு யாதவ் என்பவர் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இவர் கணித பாடத் தேர்வின் வினாத்தாளை அதிகாரிகள் இடம்பெற்றிருந்த வாட்ஸ் அப் குழு ஒன்றில் கசிய விட்டுள்ளார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read Entire Article