வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

4 days ago
ARTICLE AD BOX

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா்.

தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ரேகா குப்தா முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்ற நிகழ்ச்சியில் என்டிஏ ஆட்சிபுரியும் மாநில முதல்வா்கள், துணை முதல்வா்கள் மற்றும் பிற மூத்த தலைவா்கள் பங்கேற்றனா்.

அதன் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ தலைவா்கள் கூட்டம் நடைபெற்றது. தில்லி முதல்வா்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து என்டிஏ கூட்டணித் தலைவா்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

இது குறித்து பாஜக பொதுச்செயலா் வினோத் தாவ்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்டிஏ தலைமையிலான மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் மேம்பாட்டுக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என கூட்டணிக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மேலும் பிகாா், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்பட அடுத்து வரவிருக்கும் பேரவைத் தோ்தல்களிலும் இதே ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா் என்றாா் வினோத் தாவ்டே.

Read Entire Article