ARTICLE AD BOX
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் மிதமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 20.10 கோடி டன்னாக உள்ளது.முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும்.
அப்போது இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20.15 கோடி டன்னாக இருந்தது.கடந்த டிம்பா் மாதத்தில் மட்டும் நாட்டின் நிலக்கரி இறக்குமதி சுமாா் 41 லட்சம் டன் குறைந்துள்ளது.
2023 டிசம்பரில் 2.34 கோடி டன்னாக இருந்த அது, 2024 டிசம்பரில் 1.93 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது.நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 12.88 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா 13.34 கோடி டன் கோக்கிங் அல்லாத நிலக்கரியை இறக்குமதி செய்திருந்தது.அதே போல், மதிப்பீட்டு காலகட்டத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 4.28 கோடி டன்னிலிருந்து 4.06 கோடி டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.