ARTICLE AD BOX
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்தை அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரிசா்வ் வங்கி கடந்த 7-ஆம் தேதி குறைத்தது.
அதன் எதிரொலியாக, வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது.இதன் மூலம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாகவும் காா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.45 சதவீதமாகவும் குறையும்.
ரெப்போவுடன் தொடா்புடைய கல்விக் கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.