ARTICLE AD BOX
வெயிலுக்கு குட்டி பிரேக்.. நாளை முதல் மழை ஸ்டார்ட்! மாறும் தமிழக வானிலை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை, அதாவது பிப்.26ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப்.27ல் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக,
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மார்ச்.1ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மார்ச்.2ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்த அளவில், இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 27 மற்றும் 28ம் தேதிகளில் அதற்கடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தொடங்கி 27 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அந்தமான் கடல்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25 மற்றும் 26ம் தேதி தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27ம் தேதி தெற்கு அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 28 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- ஜீ தமிழ் போனதும் மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்..பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி..குவியும் கமெண்ட்
- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10ஆம் தேதிக்கு பிறகு பணம் செலுத்தினால் வட்டி விகிதம் குறைகிறதா?
- தர்மபுரி பஸ் ஸ்டாண்டு அசிங்கம்.. "சென்னை காசிமேடு லோகு தெரியுமா? அல்லு உட்ரும்" 2 குடிமகள்கள் கைது
- சனிப்பெயர்ச்சி 2025: கோடீஸ்வர யோகத்தை பெறும் 4 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
- அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில்.. ஒருவர் கூட தமிழர் இல்லை! ஏன் தெரியுமா?
- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் களமிறக்கிய அமைச்சர்கள் டீம்.. லட்டு மாதிரி வந்த அறிவிப்பு
- வங்கிகளில் அடமானமாக தங்க நாணயத்தையோ தங்க பிஸ்கெட்டுகளையோ ஏன் வாங்குவது இல்லை தெரியுமா?
- வச்ச குறி தப்பாது.. மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
- சனிப்பெயர்ச்சி 2025: கும்பத்தை வச்சு செய்த ஜென்ம சனி..இழந்ததை பெறும் யோகம்.. வாழ்க்கையே மாறப்போகுது
- வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைக்க திடீர் கட்டுப்பாடு.. பொதுமக்கள் எதிர்ப்பு
- துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு ஜாக்பாட்.. யோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?
- சாயங்காலம் 6 மணிக்கு மேலே பெயரை கூட சொல்லக் கூடாத மருந்து! வசம்பின் மகத்துவம் தெரியுமா?