வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

2 days ago
ARTICLE AD BOX

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இதனை அடுத்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும் நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று தகுதி பெறாமல் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில், வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, 46.1வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
 
அந்த அணியின் ரச்சின் ரவீந்தரா அபாரமாக பேட்டிங் செய்து 112 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவின் அடிப்படையில், முதலிடம் மற்றும் இரண்டாவது இடம் யாருக்கு என்பதும் தெரிய வரும்.
 
Edited by Siva
Read Entire Article