ARTICLE AD BOX
கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் அதிரடியால் வாரந்தோறும் புது மக்களின் பிரச்சினை நேரடியாக மனுக்களாக பெற்று அங்கே அங்கேயே உடனே கூடம் தீர்வு காணப்படுகிறது. இன்று நடந்த பெட்டிஷன் மேலாவில் 45 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் எஸ்.பி. யாக பொறுப்பேற்ற ஜெயக்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஒன்றுதான் வாரந்தோறும் புதன்கிழமை பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு எஸ்.பி. அலுவலகத்திலேயே குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கையால் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் பொது மக்களின் பாராட்டு அதிகமாக பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் காவல் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று 26-ம் தேதி பெட்டிஷன் மேளா நடைபெற்றது. எஸ்.பி. ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக எஸ் பி நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி களிடம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரூபன்குமார், ராஜா, பாலகிருஷ்ணன், லாமேக், . விஜிகுமார்,. மோகன் ஆகியோர்கள் பெட்டிஷன் மேளாவில் பங்கேற்றனர். இன்று நடந்த பெட்டிஷன் மேலாவில் 45 மனுக்கள் உடனடியாக அங்கே தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன்