மேற்கு வங்காளம்: ஆற்றில் சடலத்தை வீச முயன்ற 2 பெண்கள் கைது - போலீஸ் தீவிர விசாரணை

3 hours ago
ARTICLE AD BOX

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரின் வடக்கில் அமைந்து உள்ளது அகிரிடோலா பகுதி. இங்கு ஓடும் கூக்ளி ஆற்றில், இறந்த ஒருவரின் உடலை வீச முயன்றபோது 2 பெண்கள் பிடிபட்டு உள்ளனர்.

நேற்று காலையில் காரில் இருந்து இறங்கிய அந்த பெண்கள், நீல நிற சூட்கேசை 2 பேருமாக சேர்ந்து தூக்கி வந்ததுடன், அதை ஆற்றில் வீச முயன்றுள்ளனர். இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து அந்த பெண்களை மடக்கிபிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் வளர்த்த நாய் இறந்துவிட்டதாகவும், அதை சூட்கேசில் வைத்துள்ளதாகவும் கூறி உள்ளனர். சூட்கேசை திறந்து காட்டச் சொன்னபோது உள்ளே மனித உடல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 2 பெண்களையும் கைது செய்தனர்.

இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பிடிபட்ட பெண்களிடம் இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Read Entire Article