சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 6 பேர் கைது

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை கண்காணித்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமாக வந்த 6 பேரிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களின் உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூபாய் 2.8 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article