ARTICLE AD BOX
லைஃப் லாங் வரும் விஷயத்துக்குதான் அப்படி பண்ணுவேன்.. ஓபனாக பேசிய Fire ரச்சிதா மகாலட்சுமி
சென்னை: சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி Fire படத்தின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிரபலமடைந்தது மட்டுமின்றி ஒரு பாடலில் ஓவர் கிளாமர் காட்டியதன் காரணமாக கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை பற்றியெல்லாம் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படும் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி தமிழில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அந்தத் தொடரில் அவரது நடிப்பும், அழகும் சின்னத்திரை சாவித்திரி என்று புனைப்பெயர் உருவாகவும் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த அவர்; அனைத்து குடும்பங்களிலும் ஒருவராக மாறினார். அதேசமயம் ரச்சிதாவுக்கு இருக்கும் அழக்குக்கு அவர் ஹீரோயினாகவும் மாறலாம் என்ற கமெண்ட்ஸும் வர ஆரம்பித்தன.

பிக்பாஸில் ரச்சிதா: இப்படிப்பட்ட சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார். அதில் தன்னால் முடிந்த அளவு சிறப்பாகவே விளையாடினார். இருந்தாலும் அவரால் டைட்டில் வின்னராக முடியவில்லை. அதேசமயம் அந்நிகழ்ச்சியின் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கினார். மேலும் அந்த சீசனில் அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பழகிய விதம் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் ரச்சிதா: பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரச்சிதா மகாலட்சுமிக்கு சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இதற்கும் முன்னதாகவே அவர் உப்பு கருவாடு படத்தில் நடித்திருந்தாலும் பெரிய திருப்புமுனை எதுவும் கிடைக்கவில்லை. பிக்பாஸுக்கு பிறகு அவர் கமிட்டான ஃபயர் படம் அவருக்கு தேவையான பிரபல்யத்தை கொடுத்தது. அதில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். சதீஷ்குமார் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

ரச்சிதாவின் கிளாமர்: ஃபயர் படத்தின்ஹைலைட்டாக ரச்சிதா மகாலட்சுமி இருந்தார். மெது மெதுவாய் என்கிற பாடலில் தன்னுடைய உச்சக்கட்ட கிளாமரை காண்பித்திருந்தார். அதிலும் அந்தப் பாடலில் ரச்சிதா மீது வைக்கக்கூடாத இடத்தில் எல்லாம் பாலாஜி கை வைத்தது பெரும் விவாதமானது. அதுமட்டுமின்றி பணத்துக்காகத்தான் ரச்சிதா இந்த அளவுக்கு இறங்கி வந்து கிளாமரை காட்டியிருக்கிறார். குடும்ப குத்து விளக்காக இருந்த ரச்சிதாவை இப்படி பார்க்க முடியவில்லை என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் தொடர்ந்து கூறினார்கள்.
பணத்துக்காக செய்யவில்லை: ஆனால் இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே ஒரு பேட்டியில் பேசியிருந்த ரச்சிதா, 'பணத்துக்காக இந்த மாதிரி இந்தப் படத்தில் நடிக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால்தான் நடித்தேன்' என்று விளக்கமளித்திருந்தார். இருப்பினும் அவரது விளக்கத்தை யாரும் ஏற்க தயாராக இல்லை. பெரும்பாலானோர் ரச்சிதாவை கடுமையாக விமர்சனமே செய்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் ரச்சிதா பெரிதாக எந்தவிதமான ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை.
ரஜினிகாந்த்தை இப்போது பார்த்தாலும்.. வீடியோ விடணும்.. ரம்யா கிருஷ்ணன் ஓபனா பேசிட்டாங்களே ப்பா
ட்ரெண்டாகும் பேட்டி: இதற்கிடையே அவர் தினேஷை காதலித்து திருமணம் செய்து பிறகு பிரிந்தார். எப்படியும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தால் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதை தனது செயல்கள் மூலம் உணர்த்திவிட்டார் மகாலட்சுமி. இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் நிறைய டாட்டூகளை போட்டிருக்கிறேன். தியேட்டர் மாஸ்க் டாட்டூ ஒன்றையும் பேட்டிருக்கிறேன். எதெல்லாம் எனது வாழ்க்கை முழுக்க உடன் வருமோ அதனை மட்டும்தான் நான் டாட்டூவாக போட்டிருக்கிறேன். மற்ற விஷயங்களை டாட்டூவாக நான் போடுவதில்லை" என்றார்.