"லண்டன் போனீங்களே.. அங்கு எந்த மொழியில் பேசுனீங்க?" அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

17 hours ago
ARTICLE AD BOX

"லண்டன் போனீங்களே.. அங்கு எந்த மொழியில் பேசுனீங்க?" அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

Karur
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

கரூர்: மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி கரூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், லண்டனில் எந்த மொழியில் பேசினீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழி கொள்கை தொடர்பாக இப்போது திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். அதேநேரம் மறுபுறம் தமிழகத்திற்கு மும்மொழி கொள்கை தேவையில்லை என்றும் இரு மொழிக் கொள்கையே போதும் என்றும் கூறி வருகிறார்கள்.

Senthil Balaji Annamalai

மும்மொழி கொள்கை

இதற்கிடையே மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் இப்போது மாநிலம் முழுக்க கண்டன கூட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்றைய தினம் கரூரில் திமுக சார்பில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு படிக்கச் சென்ற போது அவர் எந்த மொழியில் பேசினார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பாஜகவின் மாநில தலைவர் நம்முடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சு.. விடிந்தால் ஒரு பேச்சு என அவர் பேசி வருகிறார்.. நேற்று என்ன பேசினோம் என்பது இன்று தெரியாது. இன்று என்ன பேசினோம் என்பது நாளை தெரியாது. அவர் இந்தி குறித்தும் மும்மொழி கொள்கை குறித்தும் இப்போது பேசி வருகிறார்.

லண்டனில் என்ன பேசினீர்கள்

அவரிடம் நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். லண்டனில் படிக்கச் சென்றீர்களே.. அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா இல்லை இந்தியில் பேசினீர்களா.. எந்த மொழியில் பேசினீர்கள்? ஏன் அப்போது மட்டும் ஆங்கிலத்தில் பேசினீர்கள் என்பதை நாட்டு மக்களிடம் சொல்லுங்கள்.. அதன் பிறகு மும்மொழி கொள்கை குறித்து நாம் பேசலாம்" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"அமைச்சர் பிடிஆர் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா?" பிரஸ் மீட்டில் ஆவேசமாக பேசிய அண்ணாமலை!

அண்ணாமலை லண்டன் பயணம்

பாஜக மாநில தலைவரான அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பை மேற்கொண்டார். இதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டன் சென்ற அண்ணாமலை, 3 மாதங்களுக்கு பிறகே தமிழகம் திரும்பியிருந்தார். அதைக் குறிப்பிட்டே இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னணி

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. தாய் மொழியில் பாடங்கள் கற்பிக்க வேண்டும். மேலும், கூடுதலாக ஒரு மொழியை கற்பதில் எந்தவொரு தவறும் இல்லை என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள். மேலும், மூன்றாவது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் மாணவர்கள் விரும்பிய மொழியை கற்கலாம் எனக் கூறி வருகிறார்கள்.

இருப்பினும், இதுபோன்ற திட்டம் இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி என்று திமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள். உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கும் போது மூன்றாவது மொழி கற்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

More From
Prev
Next
English summary
Senthil Balaji vs Annamalai in three language policy row (அண்ணாமலை லண்டன் பயணம் குறித்து செந்தில் பாலாஜி கேள்வி): Senthil Balaji says DMK govt will be against Hindi imposition.
Read Entire Article