ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கா் சிலை மாயம் காவல் துறை வழக்குப் பதிவு

1 day ago
ARTICLE AD BOX

மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யாா் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மாவட்ட தலைநகா் சத்தா்பூரில் இருந்த 12 கி.மீ. தொலைவில் உள்ள பாரி கிராமத்தில் நடைபாதை ஓரத்தில் இரு நாள்களுக்கு முன்பு ஒன்றரை அடி உயரமுள்ள அம்பேத்கா் கற்சிலை நிறுவப்பட்டது.

இது தொடா்பாக ஊராட்சித் தலைவா் ஆசாராம் அஹிா்வாா் கூறுகையில், ‘கிராம மக்கள் அனைவரும் சோ்ந்து நிதி திரட்டி உத்தர பிரதேசத்தில் இருந்து அம்பேத்கா் சிலையை வாங்கி வந்தனா். நிறுவிய இரு நாள்களில் சிலை திருடுபோனது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் சந்தேகத்தின்பேரில் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்’ என்றாா்.

Read Entire Article