TN Agriculture Budget 2025: ஆரம்பமே அமர்க்களம்.. வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

4 hours ago
ARTICLE AD BOX

TN Agriculture Budget 2025 Live Update: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

தமிழ்நாடு விவசாய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னிற்கு ரூபாய் 215 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு இதுவரை 425 மெட்ரிக் லட்சம் மெட்ரிக் டன் கரும்புக்கு ரூபாய் 848 கோடி ஊக்கத்தொகையாக உழவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அண்மை காலங்களில் ஏற்பட்டு வரும் தீவிர காலநிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு இயற்கை பேடுகள் ஏற்பட்டு பயிர் சேதங்களின் மூலம் உற்பத்தியில் தாக்கத்தையும் உழவர்களின் வாழ்வார் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. 

இவ்வாறான இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உழவர்களை மீட்டு அவர்களின் வருவாய் இழப்பினை சரி செய்து வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இயற்கை பேரிடர்களால் மேல வேளாண்மை தோட்டக்கலை பயனில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 1631 கோடியே 53 லட்சம் நிதி 2084000 உழவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 5242 கோடி நிதியானது கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உணவுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

முத்தமிழர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டிலே போற்றியிடும் வகையில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பூங்க அமைக்கப்பட்டு சென்னையில் அனைவரும் சென்று கழிக்கக்கூடிய மகிழ்ச்சியூட்டும் பூங்காவாக பயனளித்து வருகிறது. 

இவ்வாறு வேளாண்மை துறையில் அடையப்பட்ட சாதனைகளை 13/3/2025 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வறிக்கையின் படி பெரும்பாலும் பருவமழையை நம்பியே தமிழ்நாட்டில் வேளாண்மை நடைபெற்றதாலும் வேளாண்மை துறை தமிழ்நாட்டின் மொத்த மாநில மதிப்புக் கூட்டலில் ரூபாய் 15.5 லட்சம் கோடி பங்களிப்புடன் ஐந்தாவது பெரிய துறையாக திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சிறுகுரு விழவர்கள் வேளாண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், முதியோர் ஓய்வூதிய தொகை, மகப்பேர் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்தின் நிவாரணத்தொகை, இறுதிச் சடங்கு நிவாரணத்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. 

வேளாண்மையை நம்பியுள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சாகுபடி காலங்களில் கிடைக்கும் பணிகளை பொறுத்தே அமைகிறது. இயற்கை பேரிடர்களால் பயிர் சாகுபடி பாதிக்கும் போது உழவர்களுடன் வேளாண் தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு நிதி உதவி உயர்த்தி வழங்ககப்படும். இதனால் நிலைமற்ற தொழிலாளர்களின் குடும்ப நலம் பாதுகாக்கப்படும். 

--விபத்து மரண மரணத்துக்கான இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ரெண்டு லட்சம் ரூபாயாகவும், 
--விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி 20000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும், 
--இயற்கை மரணத்திற்கான நிதி உதவி 20000 லிருந்து 30000 ஆகவும், 
--இறுதி சடங்கு செய்வதற்கான நிதி உதவி 2500 இருந்து 10000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 15 திட்டக்குழுகளுடன் ரூ.142 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2025-26 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் அனைத்து சிற்றூர்களையும் தன்னிறவு பெற செய்யும் நோக்கத்தோடு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உழவர்களின் வாழ்க்கை தளத்தை உயர்த்திடும் உன்னத முயற்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாளர் வளர்ச்சித் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளில் 10,187 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டில் மீதமுள்ள 2,338 கிராம ஊராட்சிகளில் சுமார் 93,6000 உழவர்கள் பயனடையும் வகையில் ரூ.269 கோடியை 50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் மூலம் அதிக மகசூல் தந்து உழவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்க செய்வதில் மக்காச்சோள பயிர் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் மக்காச்சோளம் 10,13000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. 

மக்கா சோழ சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கச் செய்யும் வகையில் மக்கா சோழ உற்பத்தி மேம்பாட்டு திட்டம் 18,7000 ஏக்கர் பரப்பளவில் 79,000 உழவர்கள் பயனடையும் வகையில் சுமார் 40 கோடியே 27 லட்சம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி மூலம் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 

தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துகள் இயக்கம் மூலம் நிலக்கடலை, எல், சூரியகாந்தி, ஆமணக்கு போன்ற பிரதான எண்ணெய் வித்து பயிர்கள் சராசரியாக104000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

உணவு எண்ணெய் தேவையில் தன்னிறவு அடையும் வகையில் நிலக்கடலை, எல், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு எண்ணெய் வித்துகள் இயக்கம் 2025-26 ஆம் ஆண்டில் 7 லட்சம் 16000 ஏக்கர் பரப்பில் சுமார் 90 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 108 கோடியே 6 லட்சம் ஒன்றிய மற்றும் மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 

இனிமையான சோலைகளாலும் நெடிய வயல்களாலும் சூழப்பட்ட இயற்கை வளம் பொருந்திய நம் நாட்டில் கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி கிடைக்கின்றன எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளார் நம்முடைய உழவர்கள். 

உழவர்களின் நீர்பாசன ஆதாரத்துக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அடிப்படையில் புதிய பாசன மின் இணைப்புகளை 2021-22 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றது. 

இந்த சிறப்பு முயற்சியின் காரணமாக இதுவரை 181000 பாசன மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, வர்ண நிலங்களும் வளம் பெற்றுள்ளன என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

வேளாண்மைகள் இயந்திரங்களை பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் 55000 உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் கருவிகள் மானிய விலைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இது தவிர 1109 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 98 கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு உழவர்களின் இயந்திர தேவைகள் மொத்தம் ரூ.510 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 

ஒழுங்குமுறை விற்பனை கூட செயல்பாடுகளை வலுபடுத்தும் வகையிலும் விலைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பினை தடுத்து லாபம் ஈட்டிடவும் ரூ.488 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடங்கள், சேமிப்புக் கடங்குகள், குளிர்ப்பதன கடங்குகள், உலர் கூடங்கள் தரம் பிரிப்புக் கூடங்கள் ஆகியவை கட்டப்பட்டதோடு 172 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. 

எதிர்காலம் இளைஞர்கள் கையில் எனவேதான் இளைஞர்களும் வேளாண்மையில் ஆர்வத்தை ஏற்படுத்தி வேளாண்மைக்கு கை கொடுக்கும் வகையில் 2021-22 ஆம் ஆண்டு முதல் வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவர்களாக்கும் திட்டத்தில் 435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு அவர்கள் கிராமப்புறங்களில் வேளாண்மை செழிக்க உதவி வருவதோடு பிற இளைஞர்களுக்கும் ஊக்கத்தினை அளித்து வருகின்றனர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண்மை உழவு நலத்துறை திட்டங்களுடன் பிற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து கடந்த நான்கு ஆண்டுகளில் 10187 கிராம ஊராட்சிகள் செயல்படுத்தியதன் விளைவாக 46000 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளன.

மேலும் ஆதி திராவிட பழங்குடியினர் உழவர்களுக்கு 1611 ஆழத்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளன. 46 லட்சம் தன்னன்றுகள், 16 லட்சம் பழச்செடிகள், பழச்செடி தொகுப்புகள் போன்றவை விநியோகிக்கப்பட்டன. இத்திட்டத்தில் 787 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 5071000 உழவர்கள் பயனமடைந்துள்ளனர். 

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறுகுரு உழவர்கள் ஒருங்கிணைந்த பண்ணையம் பசுமை, குடில் வேளாண் இயந்திரங்கள் போன்ற திட்டங்களில் கூடுதல் பயன்பெற 60 முதல் 70% வரை மானியம் பெறும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 61 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 15800 ஆதித்தாடர் பழங்குடியினர் உழவர்கள் பயனடைந்துள்ளனர். 

மேலும் படிக்க - TN Budget LIVE வேளாண் பட்ஜெட் இன்று, விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள், பயிர்க்காப்பீடு, புதிய திட்டங்கள்

மேலும் படிக்க - கிசான் கிரெடிட் கார்டு திட்டம்: தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் படிக்க - தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read Entire Article