ARTICLE AD BOX
புதுச்சேரியில் பெண்ணின் கைப்பேசிக்கு ஆபாச விடியோ, குறுஞ்செய்திகளை தொடா்ந்து அனுப்பியதாக ஒருவரை இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுச்சேரி திருக்கனூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு சில நாள்களாக அறிமுகமில்லாத கைப்பேசியிலிருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி தொடா்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், அப்பெண் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில், முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேலு (எ) இம்மானுவேல் (எ) ராஜேஷ் கைப்பேசியிலிருந்து பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரைக் கைது செய்து கைப்பேசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அவரை, புதுச்சேரி தலைமையியல் குற்றப் பிரிவு நீதிபதி சிவக்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.