ARTICLE AD BOX
சென்னையில் உள்ள பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில்,
"பையனூரில் 90 ஏக்கர் நிலம் திரைப்படத்துணியினருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. ரூ.150 கோடி மதிப்புமிக்க நிலம் திரைத்துறையினருக்கு வழங்கப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அவர்கள் முறையிட்ட நிலையில், அன்றைய காலத்தில் அவர்களால் சில காரணங்களால் குடியிருப்பு கட்ட தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை திட்டம்; நல்ல செய்தி சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.!
தற்போது அரசாணை பிறப்பித்து தங்களுக்கு உதவிட வேண்டும் என திரைத்துறையினர் வைத்த கோரிக்கையின் பேரில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; பாஜக பிரமுகருக்கு சென்னை காவல்துறை வலைவீச்சு.!