ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?

7 hours ago
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதிகா. 80,90-களில் கதாநாயகியாக கலக்கியவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் சரத்குமாரின் மனைவியான இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், பிரபு, கார்த்திக், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், ஊர்க்காவலன், போக்கிரி ராஜா, ரங்கா, நன்றி மீண்டும் வருக என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதனால், ரஜினிகாந்த் மற்றும் ராதிகா இடையே நெருக்கமான நட்பு உள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் பற்றி ராதிகா நேர்காணல் ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினிக்கு பயம் இருக்கு:

அதில் அவர் பேசியதாவது, ரஜினி கூடதான் நிறைய படங்கள் பண்ணிருக்கேன். ஒரு நாள் அவரு ஃபங்ஷனுக்கு வரும்போது ரப்பர் செருப்பு போட்டு வந்தாரு. நான் அப்படியே  பாத்தேன். பாத்துட்டு  பெரிய நடிகர்தானே.. சூப்பர்ஸ்டார்னு எல்லாரும் சொல்றாங்கனு சொன்னேன். அவரு யா..யா..னு சொன்னாரு. நான் என்னது செருப்பு.. அதுல இருந்து அவரு எங்க வந்தாலும் ஃபர்ஸ்ட் செருப்பை பாத்துக்குவாரு என்ன பாத்தாருனா.. அய்யய்யோ இதை கரெக்டா போட்டு வந்துட்டேனானு. அந்த பயம் எப்பவும் இருக்கு அவருக்கு.

கோச்சடையான் ஷுட்டிங்கிற்கு லண்டன் போயிருந்தேன். அங்க கூட அவரு உக்காந்துட்டு இருந்தபோது, என்ன ரஜினி ஷு போட்ருக்கிங்கினு சொன்னேன். கரெக்டா போட்டேன்.. கரெக்டா போட்டேன் நீங்க வந்திருக்கீங்கலனு சொன்னாரு.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி - ராதிகா படங்கள்:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிக படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். காதல் காட்சிகள் மட்டுமின்றி ரஜினி - ராதிகா இடையேயான காமெடி காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். குறிப்பாக, ஊர்க்காவலன் படத்தில் ரஜினிகாந்தை நள்ளிரவில் எழுப்பி இட்லி சாப்பிட சொல்லும் நகைச்சுவை காட்சி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகும்.

நடிகை ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமான நடிகையாக உலா வந்தவர். சித்தி, வாணி ராணி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, மறுபிறவி, பொன்னி கேர் ஆஃப் ராணி, தாயம்மா குடும்பத்தார் என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சித்தி, வாணி ராணி சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.

மேலும், ராதிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, கார்த்தி, ஸ்ரீகாந்த் என பல நடிகர்களுடனும் நடித்துள்ளார். ராதிகா சிறந்த நடிகைக்காக பல முறை விருது வென்றுள்ளார்.

Read Entire Article