ARTICLE AD BOX
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தொகுதி வரையறை செய்வது தொடர்பாக தி.மு.க. தரப்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் அளிக்கப்பட்டது.
மக்களவையில் கனிமொழியும் மாநிலங்களவையில் வில்சனும் தீர்மானங்களை அளித்திருந்தனர். அதற்கு அந்தந்த அவைத்தலைவர்கள் அனுமதி அளிக்கவில்லை.
இதைக் கண்டித்து தி.மு.க.வின் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்தும் மாநிலங்களவையிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த கனிமொழி, அங்கு செய்தியாளர்களிடம் தங்களின் வெளிநடப்புக்கான காரணத்தை விளக்கினார்.