#Breaking: கலைஞர் வீடு Vs பசுமை வீடு Vs மோடி வீடு.. சட்டபேரவையில் காரசார விவாதம்.!

18 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் பேசுகையில், "தமிழ்நாடு அரசு 2025 - 2026 பட்ஜெட் தாக்கல் செய்தது. பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. நானும் துருவித்துருவி பார்த்தும் ஏதும் கிடைக்கவில்லை. 3 இலட்சம் மக்களுக்கு வீடு வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்து, எந்த பணிகளும் நடக்கவில்லை" என கூறினார்.

இந்த விசயத்திற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், "சொல்லுரார் நல்ல கண் மருத்துவரை பார்க்க வேண்டும்" என கலாய்த்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அதனைத்தொடர்ந்து, திமுக அமைச்சர் ஐ பெரியசாமி பேசுகையில், "கலைஞர் இல்லம் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. எஞ்சிய 1 இலட்சம் வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்படும். அதிமுக ஆட்சிக்காலத்தில் பசுமை வீடு அறிவிக்கப்பட்டு, அது அதிமுக கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. மோடி வீடு வேண்டாம், கலைஞர் வீடு வேண்டும் என மக்கள் விரும்பி கலைஞர் வீடு திட்டத்தை கேட்டு பெறுகின்றனர்" எனப்பேசினார்.

இதையும் படிங்க: #Breaking: சபாநாயகருக்கு எதிராக தீர்மானத்தில் அதிமுக பின்னடைவு.. குரல் வாக்கெடுப்பில் தோல்வி.!

பின் ஆளும் அரசின் கேள்விக்கு பதில் அளித்த எதிர்க்கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் மொத்தமாக 3 இலட்சம் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. எனது ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 20000 வீடுகள் கட்டப்பட்டன" என கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு: மனைவி மீது சந்தேகம்; 1 வயது பச்சிளம் குழந்தை அடித்துக்கொலை.. இப்படியும் கொடூர தகப்பன்?

Read Entire Article