முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு குழுவினர் 7-ந் தேதி ஆய்வு

5 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்க கண்காணிப்பு குழு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்ய 7 பேர் கொண்ட புதிய குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி, புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய குழுவில் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர், கேரள நீர்வளத்துறை கூடுதல் செயலாளர்,

காவிரி தொழில்நுட்பக்குழுவின் தலைவர், கேரள நீர்பாசனத்துறை தலைமைப் பொறியாளர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக மத்திய நீர்வள அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவர் அணில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர்கள் வருகிற 7-ந்தேதி முல்லைப்பெரியாறு அணைக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணி, மதகுகள், தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இத்தகவலை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read Entire Article