ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகை சமந்தா இடையில் ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் சமந்தா, சில காலமாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு இந்த அரிய வகை தசை நோயிலிருந்து ஓரளவு குணமானார். சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான சிட்டாடல் சீரிஸ் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே சமயத்தில் சமந்தாவின் அப்பா உயிரிழந்தார். இதனால் மன ரீதியான அழுத்தம் அவருக்கு அதிகமாக வந்தது. ஆகையால் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தற்போதுதான் சமந்தா ஆரோக்கியமாகி வருகிறார்.
இதனையடுத்து தற்போது மீண்டும் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான முழு முயற்சியில் இறங்கியுள்ளாராம். அதற்கான ஸ்கிரிப்ட்களை கேட்டு வருகிறாராம். மேலும், ஒரு நல்ல லவ் ஸ்டோரி கதைகளை செலக்ட் செய்கிறாராம்.
சமந்தா தற்போது அழகிய சேலையில் விருது விழா ஒன்றிற்கு சென்று இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
படங்களில் நடிப்பதைவிட, வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கான நேரங்கள் குறைவு என்பதால், அதில் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
இது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில், பல கஷ்டங்களுக்கு நடுவில் தன்னை மேம்படுத்திக்கொண்டு, சரியான பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
இதற்கு ஒரு காரணம் சிட்டாடல் படத்தின் வரவேற்பாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.