சத்தீஷ்காரில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல்; நிதி மந்திரி

3 hours ago
ARTICLE AD BOX

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் சட்டசபையில் நிதி மந்திரி ஓ.பி. சவுத்ரி 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்து பேசினார். இந்த பட்ஜெட்டானது, மாநில பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் மக்களின் வாழ்வு மேம்பாடு ஆகியவற்றை இலக்காக கொண்ட திட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது என கூறினார்.

இதன்படி, மக்கள் நலனுக்காக பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு ரூ.1 குறைக்கப்பட்டு உள்ளது. விரைவாக வளர்ச்சியை அடைய அறிவு நலனுக்கான பட்ஜெட்டாக இது உள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும், நல்ல நிர்வாகம், விரைவான வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

சத்தீஷ்கார் மக்களுக்கு மானிய விலையிலான மின்சாரம் தொடரும். சில வரிகளும் குறைக்கப்பட்டு உள்ளன. பஸ்தாரில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். நக்சல்களின் ஆதிக்கம் சிறந்த முறையில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என துணை முதல்-மந்திரி விஜய் சர்மா கூறினார்.

எனினும், விவசாயிகளுக்கோ அல்லது வேலைவாய்ப்பின்மைக்கோ எந்தவொரு திட்டமும் இல்லை என மாநில முன்னாள் முதல்-மந்திரியான காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகெல் கடிந்து கொண்டார். பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறிய உத்தரவாதம் பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட்டில், வேளாண் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியும், கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்காக ரூ.8,500 கோடியும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வரலாற்றில் முதன்முறையாக, பொதுப்பணி துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.


Read Entire Article