ARTICLE AD BOX
தற்போது உள்ள காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒழுங்கற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறைதான். என்ன தான் அறிவியல் பெருகினாலும், தற்போது வரை புற்றுநோயை நிரந்திரமாக குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. உயிரிழப்பு ஏற்படுவதை தாமதம் செய்ய தான் முடியும்.
இந்த புற்றுநோய் மாரடைப்பு போன்று திடீரென்று உயிரை எடுக்காது. ஆனால் கடுமையான வலிகளை கொடுத்து உயிரை பறித்துவிடும். இந்த புற்றுநோய் செல்கள் உடலில் வளராமல் இருக்க நன்னாரி வேரை மருந்தாக பயன்படுத்தலாம்.
ஆம், இந்த நன்னாரி வேர் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று நன்னாரி சர்பத் தான்.
இந்த நன்னாரி சர்பத்தை செய்ய தேவைப்படும் மூலப் பொருள் என்றால் அது நன்னாரி தான். இயற்கையாவே கசப்பு தன்மை கொண்ட இந்த நன்னாரி வறண்ட நிலத்தில் வளரும் ஒருவகை தாவரமாகும். இதன் வேரில் நல்ல நறுமணம் இருக்கும். பொதுவாக நமக்கு இந்த வேர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்பது தான் தெரியும். ஆனால் உண்மையில், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
ஆம், உண்மை தான். இதற்கு நீங்கள் நாட்டு மருந்து கடையில் இருந்து நன்னாரி வேர் பொடியை வாங்கிக் கொள்ளலாம். பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதில் அரை தேக்கரண்டி நன்னாரி பொடியை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, நன்னாரி பானத்தை ஆறவைத்து குடியுங்கள்..
அடிக்கடி இந்த பானம் குடிப்பதால், சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். செரிமானப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பித்தப்பை கோளாறுகளை குணப்படுத்தும். வருகின்ற கோடை காலத்தில் உடல் உஷ்ணமாவதை தடுக்க இந்த பானம் பெரிதும் உதவும்.
Read more:
இந்த ஒரு துவையல் போதும்; 80 வயசு ஆனாலும் உங்களுக்கு மூட்டு வலியே வராது!!!
The post கேன்சர் செல்களை அழிக்கும் அற்புத மருந்து; இந்த வேர் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.