ARTICLE AD BOX
மதுரை: நடிகையுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக இந்த நடிகையின் விமர்சனம் இருக்கிறது. தற்போது தீவிரமடைந்திருப்பதாக சொல்கிறீர்கள். அது தீர்க்கப்பட உள்ளது. தடித்த வார்த்தை ஏதும் நான் பேசவில்லை.
என் குடும்பத்தை இழிவாகப் பேசும்போது, 15 ஆண்டுகளாக தாங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு முடிவுக்கு வரவேண்டுமே? எவ்வளவு காலம் இந்த அழுக்கை சுமந்து செல்வது? என்னை திட்டும்போதெல்லாம் என் தாயை இழுத்து பேசுவதை வலைத்தளத்தில் கேளுங்கள். எனது மனைவி, தாய் பெண் இல்லையா? இதுவரை, தற்காத்து, அமைதி காத்து போய் வேறு வழியின்றி வழக்கை நானே தொடுத்தேன்.இவ்வாறு கூறினார்.
அவரிடம் நிருபர்கள், ‘‘இடைக்காலத்தடை வழங்கி, இருதரப்பும் உடன்பட்டு செட்டில்மென்ட் அடிப்படையில் தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதே?’’ என்றதற்கு, ‘‘தடைதான் கேட்டுள்ளோம். ஆதாரமில்லாத அவதூறு வழக்கு என்பது கேட்கிற, பார்க்கிற எல்லோருக்குமே தெரியும். அதனால்தான் நானே இந்த வழக்கை தொடுத்தேன். ஆங்கிலத்தில் நியூசென்ஸ் என்பார்கள். இது ஒரு தொல்லை. எப்படி விசாரித்தாலும் பொய், அவதூறு என்று தான் வரும். இது திட்டமிட்ட பழி. இழிவுதான். தற்போதைய இந்த இடைக்காலத்தடையை வரவேற்கிறேன்.
மேலதிகமாக எப்படி நகர வேண்டுமோ, சட்டப்படி நகர்வோம்’’ என்றார். நீதிமன்ற உத்தரவுப்படி செட்டில்மென்ட் உடன்பாட்டிற்கு வழி உண்டா?’’ என நிருபர்கள் கேட்டதற்கு, சீமான், ‘‘உடன்பாடுன்னா என்ன உடன்பாடு? அதற்கு வாய்ப்பில்லை, தேவையும் இல்லை. அதைப்போய் பேசிக் கொண்டிருக்க முடியாது’’ என்றார்.
The post நடிகையுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை: சீமான் பேட்டி appeared first on Dinakaran.