ARTICLE AD BOX
முரட்டு டிஸ்கவுண்ட்.. Realme ஹோலி சேல்.. ரூ.12,999-க்கு வருது.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி ஹோலி விற்பனையில் (Realme Holi Sale) அடிமட்ட விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இதில் 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி பி3எக்ஸ் (Realme P3x) போனுக்கும், சோனி கேமரா, 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங் கொண்ட ரியல்மி பி3 ப்ரோ (Realme P3 Pro) போனுக்கும் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ரியல்மி பி3 ப்ரோ அம்சங்கள், விலை (Realme P3 Pro Specifications, Price): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (4nm Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்896 சென்சார்) மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சார்) கிடைக்கிறது. IP66/IP68 மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. இதில் ரியல்மி ஹோலி விற்பனையை முன்னிட்டு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. இதேபோல 256 ஜிபி மெமரி மாடலுக்கும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ரியல்மி பி3எக்ஸ் அம்சங்கள், விலை (Realme P3x Specifications, Price): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ரியல்மி யுஐ 6.0 மற்றும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.
ஆர்மோர்ஷெல் கிளாஸ் (ArmorShell Glass) பாதுகாப்பு, ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி கேமரா கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3எக்ஸ் போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. IP68 ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
ரியல்மி பி3 ப்ரோ மாடலை போலவே 6000mAh பேட்டரி கொடுக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இப்போது, ரியல்மி ஹோலி விற்பனையை முன்னிட்டு ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது ஆகவே, இந்த போனை ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்க முடியும். இதோபோல 8 ஜிபி மாடலுக்கும் டிஸ்கவுண்ட் வருகிறது.
ரியல்மி ஹோலி விற்பனையானது மார்ச் 7ஆம் தேதி தொடங்கியது. வரும் மார்ச் 15ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த நாட்களில் மேற்கண்ட மாடல்கள் மட்டுமல்லாமல், ரியல்மி 14எக்ஸ், ரியல்மி 13பிளஸ், ரியல்மி 13 5ஜி போன்ற பல்வேறு மாடல்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் உங்களது பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலை வாங்கி கொள்ளுங்கள்.