ARTICLE AD BOX
3 மாசத்துக்கு இவ்ளோ தானா.. Vodafone கிட்ட இப்படி ஒரு Plan-ஆ.. நிதானமா Data யூஸ் பண்ணலாம்.. இது தெரியாம போச்சே!
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெலுக்கு அடுத்தபடியாக.. இந்திய டெலிகாம் துறையில், மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ள வோடபோன் ஐடியாவிடம் இப்படி ஒரு பிளான்-ஆ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு ரீசார்ஜ் உள்ளது. அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை என்ன? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் ஸ்விக்கிஒன் (SwiggyOne) சந்தாவை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக இந்த கூடுதல் நன்மையை உள்ளடக்கிய ஒரே ஒரு போஸ்ட்பெய்டு திட்டத்தை மட்டுமே வோடபோன் ஐடியா கொண்டுள்ளது.

அறியாதோர்களுக்கு ஸ்வக்கிஒன் என்பது ஸ்விக்கி நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் ஒரு பிரீமியம் சந்தா ஆகும். இதன்கீழ் பயனர்களுக்கு இலவச டெலிவரிகள், மெம்பர்களுக்கு மட்டுமான பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் ஸ்விக்கி ஜீனி (Swiggy Genie) சேவையில் தள்ளுபடிகள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்
இப்போதைக்கு ஸ்விக்கியில் இருந்து நேரடியாக ஸ்விக்கிஒன் சந்தாவை வாங்கினால்.. மூன்று மாதங்களுக்கு ரூ.299 கட்டணமும், ஒரு வருடத்திற்கு ரூ.899 கட்டணமும் செலுத்த வேண்டி ருக்கும். ஆனால் இதே ஸ்விக்கிஒன் சந்தாவை 3 மாதங்களுக்கு இலவசமாக பெற, வோடபோன் ஐடியாவன் குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் போதும்.
அது வோடபோன் ஐடியா ஸ்விக்கிஒன் போஸ்ட்பெய்டு திட்டம் (Vodafone Idea SwiggyOne Postpaid Plan) ஆகும். இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆகும். வோடபோன் ஐடியாவின் ரூ.499 போஸ்ட்பெய்டு திட்டம் 20 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது 4ஜி டேட்டாவாகும் மற்றும் இந்த திட்டத்துடன் எந்தவிதமான சர்வீஸ் வேலிடிட்டியும் இல்லை.
ஆனால் இதன்கீழ் கிடைக்கும் டேட்டா 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இதுவொரு டேட்டா பேக் செயல்படும். அதாவது பயனர் ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஸ்விக்கிஒன் சந்தாவும் மூன்று மாதங்களுக்கு அணுக கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவின் ஸ்விக்கிஒன் போஸ்ட்பெய்டு திட்டம் இந்தியா முழுவதும் உள்ள விஐ வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கிறது. இது ஒரு போஸ்ட்பெய்டு டேட்டா வவுச்சர் ஆக இருப்பதால் பெரும்பாலான பயனர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், நீங்கள் ஒரு விஐ வாடிக்கையாளராக இருந்து ஸ்விக்கிஒன் சந்தாவை மூன்று மாதங்களுக்கு பெற விரும்பினால், இதுவொரு நல்ல தேர்வாக இருக்கும்!
ஸ்விக்கிஒன் சந்தாவின் கீழ், பயனர்கள் ரூ.199 க்கு மேல் உணவு ஆர்டர்களுக்கு இலவச டெலிவரிகளையும், கார்ட் மதிப்பு ரூ.199 க்கு மேல் இருந்தால் இன்ஸ்டாமார்ட்டில் இலவச டெலிவரிகளையும் பெறுவார்கள். உணவு மற்றும் பிற பொருட்களுக்கு 30% கூடுதல் தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கும். ஸ்விக்கிஒன் உடன் உள்ள பயனர்கள் டைன் அவுட்முன்பதிவுகளில் முன் பதிவு ஒப்பந்தங்களுக்கான பிரத்யேக அணுகலையும் பெறுவார்கள். மேலும், அனைத்து ஸ்விக்கி ஜிஜீனி ஆர்டர்களுக்கும் 10% தள்ளுபடியும் கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்திடம் கூட "இதேபோன்ற", சுவாரசியமான ஒரு "பிரத்யேக" நன்மை கிடைக்கிறது. அது விபத்து காப்பீட்டு (Accidental Insurance) நன்மையாகும். விபத்து காப்பீட்டு நன்மை உடன் வரும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் - ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகும். இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுமே பார்தி ஏர்டெல்லின் அனைத்து டெலிகாம் வட்டத்திலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அணுக கிடைக்கின்றன.
மேற்கண்ட 3 பாரதி ஏர்டெல் திட்டங்களும் வாடிக்கையாளருக்கு விபத்தின் வழியாக மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் மற்றும் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000 விபத்து காப்பீட்டு தொகையை கொடுக்கும். இந்த 3 ஏர்டெல் திட்டங்களின் கீழ் கிடைக்கும் இன்சூரன்ஸ் ஆனது ஐசிஐசிஐ லோம்பார்டு (ICICI Lombard) உடன் இணைந்து வழங்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.