மார்ச் 19 வரை எந்த TWS இயர்பட்ஸ்-ம் வாங்கிடாதீங்க.. வெயிட்டான அம்சங்களுடன் Realme-யின் Lite வருது!

11 hours ago
ARTICLE AD BOX

மார்ச் 19 வரை எந்த TWS இயர்பட்ஸ்-ம் வாங்கிடாதீங்க.. வெயிட்டான அம்சங்களுடன் Realme-யின் Lite வருது!

Gadgets
oi-Muthuraj
| Published: Sunday, March 9, 2025, 22:48 [IST]

ரியல்மி (Realme) நிறுவனம் தனது ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் (Realme Buds T200 Lite true wireless earbuds) மாடலின் இந்திய அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 2025 மார்ச் 19 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ன் "ஊகிக்கப்பட்ட" லேண்டிங் பேஜ் ஆனது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் வெளியானது.

மார்ச் 19.. வெயிட்டான அம்சங்களுடன் Realme-யின் Lite வருது

அது ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ன் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியதோட "டாப் பாஸ், எண்ட்லெஸ் பவர்" (Top Bass, Endless Power) என்ற டேக்லைனையும் கொண்டிருந்ததது. அதனை தொடர்நது ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ன் இந்திய அறிமுக தேதி மார்ச் 19 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் இந்த இயர்பட்ஸ்-ல் 12.4 மிமீ டைனமிக் பாஸ் ட்ரைவர் (12.4mm dynamic bass driver), தெளிவான கால்களுக்கு டூயல்-மைக் ஏஐ நாய்ஸ் ரிடெக்ஷன் (Dual-mic AI noise reduction) மற்றும் கனெக்ட் செய்யப்பட்ட கேஜெட்களுக்கு இடையில் தடையின்றி மாறுவதற்கான டூயல்-டிவைஸ் இணைப்பு (Dual-device connectivity) ஆகிய அம்சங்கள் உள்ளன.

மேலும் ரியல்மி லிங்க் ஆப் (Realme Link App) மூலம் உங்களுடைய சூழ்நிலை அடிப்படையிலான ஆடியோ சரிசெய்தல்களை மேற்கொள்ள முடியும். ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது ஐபிஎக்ஸ்4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கை (IPX4 water resistance rating) கொண்டுள்ளன. இது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல ஆக்சஸெரீஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 48 மணிநேரம் வரை மொத்த பிளேபேக்கை (கேஸ் + இயர்பட்கள்) வழங்கும். இருப்பினும் பேட்டரி விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது நீலம், கருப்பு மற்றும் சாம்பல் (வோயேஜ் ப்ளூ, வோல்ட் பிளாக் மற்றும் ஸ்டார்ம் கிரே என சந்தைப்படுத்தப்படும்) ஆகிய மூன்று வாங்க கிடைக்கும்

விலை நிர்ணயம் மற்றும் கோடெக் ஆதரவு மற்றும் ட்ரைவர் மெடீரியல் உள்ளிட்ட முழு அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் மார்ச் 19 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். ரியல்மி இந்த லேட்டஸ்ட் ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது போட் (boAt), நாய்ஸ் (Noise) மற்றும் ரியல்மியின் சொந்த நார்சோ (Narzo) சீரீஸ் போன்ற பிராண்டுகளால் ஆதிக்கம் செலுத்தும் பட்ஜெட்-விலை டிடபுள்யூஎஸ் பிரிவில் நுழைகிறது.

போட் நிறுவனமானது வருகிற மார்ச் 21 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அதன் கிரிஸ்டல் நிர்வாணா கிரிஸ்டல் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ (boAt Nirvana Crystl TWS Earbuds) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போட் நிர்வாணா கிரிஸ்டல் நிர்வாணா கிரிஸ்டல் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 32dB ஏஎன்சி (ANC - ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்), ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் போட்-ன் சிக்னேச்சர் சவுண்ட் ஆகியவை இடம்பெறும். மேலும் இது ஒரு ட்ரான்ஸ்பரென்ட் சார்ஜிங் கேஸுடன் (Transparent charging case) வரும். அது 100 மணிநேர மொத்த பிளேபேக் மற்றும் ஆப் அடிப்படையிலான கஸ்டமைசேஷனை வழங்கும்

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Realme Buds T200 Lite TWS Earbuds Launching in India on March 19 Major Features Revealed
Read Entire Article