ARTICLE AD BOX
சத்தமில்லாமல் அறிமுகமான Vivo 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்300ஐ (Vivo Y300i) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்300ஐ அம்சங்கள் (Vivo Y300i specifications): 6.68-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1608×720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராபன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் உடன் விவோ ஒய்300ஐ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு Origin OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் இதில் ஐஆர் சென்சார் (IR sensor) ஆதரவும் உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி + 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
50எம்பி ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

6500mAh பேட்டரி உடன் விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய .44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஜேட் பிளாக் (Jade Black), ரைம் ப்ளூ (Rime Blue), டைட்டானியம் (Titanium) நிறங்களில் விவோ ஒய்300ஐ போனை வாங்க முடியும்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய விவோ போனின் ஆரம்ப விலை 1499 yuan (இந்திய மதிப்பில் ரூ.18,001)-ஆக உள்ளது.