ARTICLE AD BOX
Published : 10 Mar 2025 12:22 PM
Last Updated : 10 Mar 2025 12:22 PM
டீப்சீக்கை தொடர்ந்து Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் சீனா?

சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஏஐ சாட்பாட்டுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.
உலகில் ஏஐ நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தான் மகா சக்தி படைத்த நாடுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் அமெரிக்கா, சீனா இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வெளிவந்தது. தொடர்ந்து கூகுளின் Gemini, எக்ஸ் தளத்தின் Grok என ஏஐ சாட்பாட்களின் பட்டியல் நீண்டது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்டத்தை அமைதியாக கவனித்தது சீனா. இந்தச் சூழலில் தான் நடப்பு ஆண்டின் ஜனவரியில் சீனாவை சேர்ந்த ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் ஆர்1 மாடல் அறிமுகம் செய்தது. அது சில நாட்களில் உலக அளவில் கவனம் பெற்றது. சாட்ஜிபிடி-யை பின்னுக்கு தள்ளியது. இருப்பினும் சில நாடுகளில் சில காரணங்களால் தடையை எதிர்கொண்டது. இந்நிலையில், Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது.
இதை ஸ்டார்ட்-அப் நிறுவனமான Monica அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் பலரது கவனத்தை இது பெற்றுள்ளது. சீனாவை அடுத்த ஏஐ புரட்சி என இப்போது இதை டெக் வல்லுநர்கள் சொல்லி உள்ளதாக தகவல். இப்படி அதை சொல்ல காரணம் சவாலான டாஸ்குளை கையாளும் திறனை Manus கொண்டுள்ளது தான். இப்போதைக்கு இதை அழைப்பின் பேரில் மட்டுமே வெப் ப்ரிவ்யூவாக பார்க்க முடியும். இது குறித்த டெமோ வீடியோ ஒன்றும் manus.im தளத்தில் வெளியாகி உள்ளது.
Manus? - உலகின் முதல் அசல் ஏஐ ஏஜென்ட் என இது சொல்லப்படுகிறது. இதற்கு கொடுக்கப்படும் சவாலான டாஸ்குகளை சுயமாக சிந்தித்து, திட்டமிட்டு, செயல்படுத்தும். பயனர் கேட்கும் தகவலை விரிவானதாக தரும். இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் DeepSearch-னை விடவும் சிறப்பாக செயல்படும் என தகவல். வெப்சைட் உருவாக்கம், பயண திட்டமிடல், பங்குகள் குறித்த விரிவான அறிக்கை என பல்வேறு துறை சார்ந்த தகவல்களை இது தரும் என அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பயனர்கள் கொடுக்க வேண்டியது வெறும் ஒரு Prompt மட்டுமே. கடந்த 6-ம் தேதி இது அறிமுகம் ஆகியுள்ளது. இதை சோதித்து பார்த்தவர்களும் சிறந்த ஏஐ என சொல்லி உள்ளனர்.
தானியங்கி முறையில் டாஸ்குகளை மேற்கொள்வது, தனித்துவம், நிகழ் நேரத்தில் இன்டரெக்ட் செய்வது, வெறும் டெக்ஸ்ட்களை மட்டுமே தராது அதை பிடிஎஃப், ஸ்ப்ரெட்ஷீட் பிரசென்டேஷனாகவும் வழங்கும். மேலும், லைவ் வெப் பேஜ்களை இது பிரவுஸ் செய்கிறது. இது அனைத்தும் இதன் சிறப்பு அம்சங்களாக உள்ளது. சாட்ஜிபிடி போலவே இதை பயன்படுத்த முடியும் என தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் இது அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என தகவல்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை