
மார்ச் 10, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் எக்ஸ் வலைப்பக்கம் (X Platform), உலகளவில் பல மில்லியன் கணக்கான மக்களால் தினமும் கருத்துக்களையும், தகவலையும் பரிமாற பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி, தனது எக்ஸ் நிறுவனத்துடன் இணைத்துக்கொண்ட எலான் மஸ்க், பல நிர்வாக ரீதியான மாற்றங்களையும், புதிய அம்சத்தையும் எக்ஸ் பக்கத்தில் வழங்கி இருந்தார். அவ்வப்போது, எக்ஸ் பக்கம் தொழில்நுட்ப கோளாறுகளையும் எதிர்கொள்கிறது. Air Cooler Buying Guide: அடிக்கிற வெயிலுக்கு ஏர் கூலர் வாங்க போறீங்களா.. அப்போ இதை பார்த்துட்டு போங்க.!
சர்வதேச அளவில் முடங்கியது (X Global Outage):
இந்நிலையில், சர்வதேச அளவில் எலான் மஸ்கின் எக்ஸ் (X Down) வலைப்பக்கம் முடங்கி இருக்கிறது. பயனர்கள் தங்களின் எக்ஸ் கணக்குகளை கையாள இயலாமல் திணறி இருக்கின்றனர். பயனர்களால் அவர்களின் பதிவுகள், பிற பதிவுகளையும் காண முடியவில்லை. இதனால் எக்ஸ் தளம் முடங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் பணியில் எக்ஸ் குழும பணியாளர்கள் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, சில நிமிட இடைவெளிக்கு பின்னர், எக்ஸ் வலைப்பக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
உலகளவில் முடக்கத்தை எதிர்கொண்ட எக்ஸ்:
The X platform cannot be accessed from many places in the world. #XDOWN pic.twitter.com/ImXqV8XQDX
— COINOTAG NEWS (@coinotagen) March 10, 2025