ARTICLE AD BOX
இப்படி இருக்கனும் ஆஃபர்.. வெறும் ரூ.12,499 போதும்.. 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களும் ஆஃபர்னா இப்படி இருக்கனும் என்று சொல்லும்படி 12 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் வெளியான ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விலையை தெரிந்து கொள்வோம்.
இந்த ஐக்யூ போனானது கிட்டத்தட்ட ஒரு வருட பழைய மாடலாக இருக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. அதேபோல ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) பேக் செய்துள்ளது. ஆனால், டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் பட்டையை கிளப்பும்படியே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி என்ன பீச்சர்கள்?

ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): இந்த ஐக்யூ போனில் 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவானது, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் பஞ்ச்-ஹோல் (Punch Hole) டிசைன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
முன்போ சொன்னது போல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட்டில் பக்கா 5ஜி பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Octa Core 4nm Snapdragon 6 Gen 1) சிப்செட் கிடைக்கிறது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஹைலைட் பீச்சராக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. ஏனென்றால், ரூ.12,000 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்டிருக்கிறது. இதில் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், எஸ்டி கார்டு பயன்படுத்தலாம்.
இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.14,499ஆக இருக்கிறது.
ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.2000 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.12,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெற கார்டுகள் தேவையில்லை. விலையில் இருந்து குறைக்கப்படுகிறது. டொர்னாடோ கிரீன் (Tornado Green), ஸ்டார்ம் கிரே (Storm Grey) ஆகிய கலர்களில் வாங்கலாம்.