ARTICLE AD BOX
சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடரும் பட்சத்தில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டக்கூடும் என ஆண்டின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பல நாடுகளில் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது, வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பது போன்றவையும் இதற்கு காரணங்களாக சொல்லப்பட்டது.
மேலும் பண்டக சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 85 ஆயிரம் ரூபாய் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாக தெரிவித்த பொருளாதார நிபுணர்கள், 2025-ம் ஆண்டு ஆபரணத் தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கும் எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சொன்னதை போலவே தங்கம் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..
2024ஆம் ஆண்டிலேயே தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியதை பார்த்தோம், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரனுக்கு 47 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்கப்பட்ட விலை, ஆண்டு முடிவில் கிட்டத்தட்ட 60ஆயிரத்தை தொட்டிருந்தது.
இந்த சூழலில் கடந்த 2025 பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து 62,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இது எப்போதும் இல்லாதவகையில் மிகப்பெரிய உச்சம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ரூ.840 உயர்ந்து புதிய உச்சமாக ரூ.62,480-ஆக மாறியுள்ளது. ஆண்டின் தொடக்கத்திலேயே இப்படி என்றால், 2025-ம் ஆண்டு வல்லுநர்கள் சொன்னதைபோல தங்கத்தின் விலை எங்கேயோ சென்று நிற்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.