ARTICLE AD BOX
மார்ச் 7 முதல் SALE.. வீட்டுக்கு 2 ஆர்டர் கன்ஃபார்ம்.. ரூ.8499க்கு இப்படி ஒரு Samsung 5G Phone-ஆ.. எந்த மாடல்?
சில தினங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனம் ரூ10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை நாளை (மார்ச் 7 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எந்த இகாமர்ஸ் வலைதளத்தில் வாங்க கிடைக்கும்? சாம்சங் நிறுவனம் வேறு என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 4 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்
- 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.7-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 6ஜிபி வரை ரேம் (Up to 6GB RAM)
- அதிகபட்சமாக 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா யூனிட் (Dual Rear Camera Unit)
- 8எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம் (Samsung Knox Vault feature)
- சாம்சங் குவிக் ஷேர் (Samsung Quick Share)
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி விலை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,499 க்கும் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.10,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.500 வங்கி தள்ளுபடியை சேர்த்த அறிமுக விலை நிர்ணயம் ஆகும்.
ஆனால் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி பேனர் ஆனது இந்த ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.8,499 முதல் வாங்க கிடைக்கும் என்று கூறுகிறது. இது குறித்த விவரங்கள் நாளை விற்பனை தொடங்கிய பின்னரே தெரியும். இது பிளேஸிங் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் கலர்களில் நாளை (மார்ச் 7) முதல், அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும்.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி உடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனும்அறிமுகமானது. இது ஏற்கனவே அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது. இது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும். அதே 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் ஆப்ஷன்கள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும்
மேற்கண்ட விலைகள் அறிமுக விலைகள் ஆகும். அதாவது ரூ.1000 வங்கி அடிப்படையிலான தள்ளுபடியை உள்ளடக்கிய விலை ஆகும். சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ளஷ் பிங்க், மிண்ட் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- அதிகபட்சமாக 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 13எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம்
- டேப் அண்ட் பே ஆதரவு கொண்ட சாம்சங் வேலட்
- சாம்சங் குவிக் ஷேர்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி