ARTICLE AD BOX
பயப்படுறீயா குமாரு.. Motorola-வை காப்பி அடித்து அடுத்த போன்.. Samsung-க்கு வந்த சத்திய சோதனை.. எந்த மாடல்?
அதான் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் அறிமுகமாகிடுச்சே.. இனி இந்த 2025 இல் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கும் அளவிற்கு என்ன போன் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த கேள்விக்கு பதில் ஒன்றல்ல, இந்த 2025 இல் இன்னும் இரண்டு முக்கிய அறிமுகங்கள் நிகழ உள்ளது.
ஒன்று - கேலக்ஸி எஸ்25 சீரீஸில் புதிய மெம்பர் இணைய உள்ளார். அது கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஏப்ரல் 2025 இல் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது - சாம்சங்கின் 2025 போல்டபிள் மற்றும் பிளிப் போன்கள். அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7) மாடல்கள்!

இவ்விரு மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஆனது "இது என்ன டா சாம்சங் கம்பெனிக்கு வந்த சத்திய சோதனை" என்று கேட்கத்தூண்டும் படியாக உள்ளது. அதென்ன அப்டேட்? கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பானது (பரிமாணங்களில் சிறிய அளவிலான மேம்படுத்தல்களை தவிர) பெரும்பாலும் அதன் "முன்னோடியை" போலவே இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ஆனது இது இந்த மோட்டோரோலா ரேஸர் ஸ்மார்ட்போனில் உள்ளதை போன்ற கவர் டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறுகிறது.
அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 ஸ்மார்ட்போனில் இருந்து நாம் பார்க்கும் போல்டர் போன்ற கவர் டிஸ்பிளே வடிவமைப்பை தொடர்வதற்கு பதிலாக, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி இஸட் பிளிப் 7 மாடலில் மோட்டோரோலா ரேஸர் பிளஸ் மாடலில் உள்ளதை போன்ற கவர் டிஸ்பிளேவை கொண்டுவர உள்ளது.
இதன்கீழ் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஸ்மார்ட்போனின் இரண்டு கேமராக்களும் மோட்டோரோலா ரேஸர் மாடலில் உள்ளதை போலவே டிஸ்பிளேவிற்குள் ஒருங்கிணைக்கப்படும். கூடுதலாக இது முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 3.6 இன்ச் டிஸ்பிளேவுக்கு பதிலாக சற்றே பெரிய 4 இன்ச் டிஸ்பிளேவை பெறும் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- எக்ஸினோஸ் 2500 அல்லது எக்ஸினோஸ் சிப்களில் இருக்கும் சாத்தியமான உற்பத்தி சிக்கல்கள் காரணமாக வேறு சிப்செட்
- 12ஜிபி ரேம்
- 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இது 2025 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை, இதன் ஆரம்ப விலை $1,099 ஆக இருக்கலாம்; இந்தியாவில் இது ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கேலக்ஸி இஸட் பிளிப் 7 உடன் கூடுதலாக 2 இஸட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது: கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ மற்றும் சாம்சங் பிராண்டின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஜி ஃபோல்ட்.