ARTICLE AD BOX
புதிய மாற்றம்.. Jio சிம் யூஸ் பண்றீங்களா.. இனி கிடைக்காது.. ரூ.249 - ரூ.3599 வரை எல்லா பிளானுக்கும் அடி!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் பிரிவின் கீழ் உள்ள.. கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களிலும் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அது என்ன திட்டங்கள்? அப்படி என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது? இதோ விவரங்கள்:
28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ,249 திட்டத்தில் இருந்து 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.3599 திட்டம் வரையிலாக.. கிட்டத்தட்ட அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து இலவச ஜியோசினிமா சந்தா நீக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டங்கள் ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றை இரண்டு இலவச சேவைகளை மட்டுமே கூடுதல் நன்மைகளாக வழங்குகின்றன.

அதாவது இனிமேல் ஜியோ வாடிக்கையாளர்கள், பழைய ஜியோ சினிமா அதாவது புதிய ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பிரத்யேகமாக வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (ரூ195 மற்றும் ரூ.949) ரீசார்ஜ் செய்ய வேண்டும் அல்லது ஜியோஹாட்ஸ்டார் சேவைக்கான சந்தா திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்போது தான் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சேவையை அணுக முடியும்.
ஒருவேளை நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் கிடைக்கும் சந்தா திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய விரும்பினால்.. உங்களுக்கு மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான். இதில் மொபைல் பிளான் தான மிகவும் மலிவான திட்டமாகும். மேலும் இது 2 வகையான சந்தா விருப்பங்களுடன் வருகிறது.
ஒன்று - 3 மாத கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான். விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டம், ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டும், எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.149 ஆகும். அதாவது மாதத்திற்கு ரூ.50 என்கிற செலவின் கீழ் இது கிடைக்கும்.
இரண்டாவது - 1 ஆண்டு கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான்: இதுவும் ரூ.149-ஐ போலவே விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டமாகும். மேலும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டுமே எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் இது 1 ஆண்டு அல்லது 12 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆகும்
ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இதுவும் விளம்பர ஆதரவுடன் வரும் திட்டம் தான். ஆனால் இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் ஃபுல்எச்டி (1080பி) ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கிறது மற்றும் இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. விலை மூன்று மாதங்களுக்கு - ரூ.299 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.899.
ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இது விளம்பரங்கள் இல்லாத திட்டமாகும். இது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் விளையாட்டு மற்றும் பிற லைவ் நிகழ்வுகலில் சில விளம்பரங்கள் இருக்கும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது. விலை 1 மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு - ரூ.499 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.1499.
ஜியோவின் ரூ,195 கிரிக்கெட் பிளானின் நன்மைகள்: இதன்கீழ் உங்களுக்கு மூன்று மாத காலத்திற்கான (90 நாட்களுக்கான) ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும். இதோடு சேர்த்து 90 நாட்களுக்கு 15ஜிபி அளவிலான 4ஜி/5ஜி டேட்டாவும் கிடைக்கும். இதன்கீழ் கிடைக்கும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவானது விளம்பர ஆதரவு உடன் வரும் மொபைல் சந்தா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்த சாந்தாவின் கீழ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் வழியாக ஒரு நேரத்தில் டிவைஸ் வழியாக 720பி என்கிற ரெசல்யூஷனின் கீழ் ஜியோ ஹாட்ஸ்டார் கன்டென்ட்களை ஸ்ட்ரீமிங் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் கிடைக்கும் 3 மாத கால மொபைல் சந்தாவின் விலை ரூ.149 ஆகும்
ஜியோவின் புதிய ரூ.195 கிரிக்கெட் பிளான் ஆனது ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை உள்ளடக்கிய இரண்டாவது ஜியோ ரீசார்ஜ் திட்டமாகும். இதற்கு முன்பாகவே ரூ.949 திட்டம், 90 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை தொகுத்து வழங்குகிறது. இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட்வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா நன்மை மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.