ARTICLE AD BOX
ஏப்.16 வரேன்.. 12GB ரேம், 1TB மெமரி, 200MP கேமரா.. வேற போன் வாங்கிடாதீங்க.. Samsung-ன் அல்ட்ரா ஸ்லிம் போன்!
ஆப்பிள் நிறுவனம் எப்படி அதன் ஐபோன் 16 சீரீஸில் புதிய ஐபோன் 16இ மாடலை அறிமுகம் செய்து "இன்ப அதிர்ச்சி" கொடுத்ததோ.. அதேபோல சாம்சங் நிறுவனமும் அதன் கேலக்ஸி எஸ்25 சீரிஸில் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடலாகும்.
சாம்சங் நிறுவனத்தின் இந்த அல்ட்ரா ஸ்லிம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது நாம் எதிர்பார்ப்பதை விட விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜிற்கான லான்ச் டைம்லைன் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த தகவல் முன்னதாக லீக் ஆன வெளியீட்டு தேதி உடன் ஒற்றுபோகுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @MaxJmb வழியாக கிடைத்துள்ள தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் 2025 ஏப்ரல் மாதம் அறிமுகமாகும்
முன்னதாக சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனை 2025 ஏப்ரல் 16 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகி இருந்தது. அந்த @MaxJmb வழியாக கிடைத்துள்ள புதிய தகவல் ஏப்ரல் 16 என்கிற வெளியீட்டு தேதிக்கு இன்னும் வலுவூட்டும்படி உள்ளது. வெளியாகும் பிராந்தியத்தை பொறுத்து, சாம்சங்கின் இந்த சூப்பர் ஸ்லிம் பிரீமியம் கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 15 அன்று கூட வெளியிடப்படலாம்.
ஆரம்பகால அறிக்கைகள் ஆனது கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று கூறின. தற்போது அவைகளும் கிட்டத்தட்ட உண்மையாகி உள்ளன. இருப்பினும் சாம்சங்கின் புதிய எட்ஜ் மாடல் ஆனது வெறும் 40,000 யூனிட்கள் மட்டுமே என்கிற அளவிலான உற்பத்தியை மட்டுமே சந்திக்கும் என்று கூறப்படுகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.6-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட்
- 12ஜிபி ரேம் + 1டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 7
- 200எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்
- 12எம்பி செல்பீ ஷூட்டர்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.80,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்குவாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,11,999 க்கு வாங்க கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 பிளஸ் ஆகிய இரண்டுமே ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கு வாங்க கிடைக்கிறது. 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,41,999 க்கு வாங்க கிடைக்கிறது மற்றும் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,65,999 க்கும் க்கு வாங்க கிடைக்கிறது.
கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் க்ரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் ஒயிட்சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது. சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான டைட்டானியம் ஜேட்க்ரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கிறது.